சினிமா படப்பிடிப்பு நடத்த தாக்கரே அரசு விதித்த நிபந்தனைகள் ரத்து..

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, சில நிபந்தனைகளுடன் படப்பிடிப்பு நடத்த  மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி அளித்தது.

‘’65 வயதுக்கு அதிகமானோர் படப்பிடிப்பில் பங்கேற்கக் கூடாது’’ என்பது முக்கிய நிபந்தனை.

இதற்குத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிபந்தனையின் படி அமிதாப்பச்சன் உள்ளிட்ட சீனியர்களை நடிக்க வைக்க முடியாது என்பதோடு மணிரத்னம் போன்ற இயக்குநர்களும் டைரக்டு செய்ய முடியாத சூழல் உருவானது.

உத்தவ் தாக்கரே அரசின் இந்த ஆணையை எதிர்த்து இந்தியத் தயாரிப்பாளர்கள் சங்கம், பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

‘’இந்த நிபந்தனை பாரபட்சமானது’’ என்று கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம்,’’ என்ன ’லாஜிக்’ இது?’ என்றும் தாக்கரே அரசைக் கேள்வி கேட்டது.

‘இது தற்காலிக ஆணை.. நிரந்தரமானது அல்ல’’ என அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த பம்பாய் உயர்நீதிமன்றம் ,சினிமா படப்பிடிப்புக்கு மகாராஷ்டிர அரசு விதித்த நிபந்தனைகளை ரத்து செய்து நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பினால் அமிதாப்பச்சன் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் நடிக்கத் தடை நீங்கியது.

மணிரத்னம் போன்ற இயக்குநர்கள் இந்தி படங்களை டைரக்ட் செய்யவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

-பா.பாரதி.