மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே வரும் 4ந்தேதி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என  கவர்னர் கோஷ்யாரி உத்தரவிட்டு உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் 55 எம்எல்ஏக்களில் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில், ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி, நேற்று இரவு மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார். கூட்டணி கட்சியான பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் துணைமுதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். கூட்டணி அமைச்சரவை குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், மகாராஷ்டிரி மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தர விட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை (4ந்தேதி)  ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக,  மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் வரும் 4ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் சட்டப்பேரவையில்  நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து,  சபாநாயகர் தேர்வு செய்யப்படுவர் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.