மகாராஷ்டிராவில் புதியதாக 3,959 பேருக்கு கொரோனா பாதிப்பு: 150 பேர் பலி

Must read

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று புதியதாக 3959 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

இன்று புதியதாக 3,959 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 14 ஆயிரத்து 273 ஆக அதிகரித்து உள்ளது.

இதுவரை 15 லட்சத்து 69 ஆயிரத்து 090 பேர் குணமடைந்து உள்ளனர். இன்று மட்டும் 6 ஆயிரத்து 748 பேர் வீடு திரும்ப, இன்னமும் 99 ஆயிரத்து 151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 150 பேர் பலியாக ஒட்டு மொத்தமாக மாநிலத்தில் 45 ஆயிரத்து 115 பேர் உயிரிழந்துள்ளனர் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article