மும்பை

யது வந்தோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுமாறு மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் வலியுறுத்தி உள்ளார்.

தற்போது நாடெங்கும் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்டமாகப் போடப்படுகிறது.   முதல் கட்டத்தில் சுகாதார ஊழியர்கள் மற்றும் கொரோனா முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.  இரண்டாம் கட்டமாக 60 வயதை தாண்டியோருக்கும் 45 வயதைத் தாண்டி இணை நோய் உள்ளோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

நேற்று முதல் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும்  பணி நடந்து வருகிறது.  மூன்றாம் கட்டமாக  45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.   ஆயினும் நாடெங்கும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.  இதில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.  இங்கு நேற்று ஒரே நாளில் 43,000க்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  நேற்று வரை 28.56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சுமார் 55000 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதில் 24.33 லட்சம் பேர் குணம் அடைந்து 3.66 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், “கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடவேண்டும்.  தற்போது நாட்டில் கோரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது.

ஆனால் மோடி அரசு பாகிஸ்தானுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக அளிக்கிறது.  முதலில் இந்தி8யாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.