மும்பை

காராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கொரோனா இல்லாத கிராமம், போட்டியை அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.  ஆயினும் மாநிலத்தில் கொரோனா முழுக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.  நேற்று இம்மாநிலத்தில் 2.30 லட்சத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சையில் இருந்தனர்.

எனவே கொரோனாவை முழுவதுமாக ஒழிக்க மாநில அரசு பல திட்டங்களைத் தீட்டி வருகிறது.  தற்போது நகரங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சிற்றூர்களில் பாதிப்பு அதிகம் உள்ளது.  எனவே அந்த பகுதி ஊராட்சி மூலம், கொரோனாவை ஒழிக்க அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே திட்டமிட்டுள்ளார்.

அவ்வகையில் மகாராஷ்டிராவில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கொரோனா அற்ற கிராமm என ஒரு போட்டியை அறிவித்துள்ளார்.  இந்த போட்டியின் படி கொரோனா இல்லாத கிராமத்துக்கு ரூ.50 லட்சம் வரை பரிசு அளிக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.