Skip to content
  • Wed. Sep 16th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
ஆன்மிகம் தமிழ் நாடு

மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் தர்ப்பணம், அக்னி தீர்த்தம் உள்பட தீர்த்தங்களில் புனித நீராடவும் தடை!

Sep 13, 2020

சென்னை: மகாளய அமாவாசையையொட்டி, அன்றைய தினம் பக்தர்கள் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் தர்பபணம் செய்வதற்கும்,  அக்னி தீர்த்த கடலில் நீராடுவது உள்பட புனித தீர்த்தங்களில் நீராடவும்   தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வரும் 17ந்தேதி மகாளய அமாவசை வருகிறது. அன்றைய தினம், இந்துக்கள்,  மறைந்த முன்னோர் களுக்கு செய்ய வேண்டிய  கடமைகளை தர்பணம் செய்து மகிழ்விப்பர்.

பித்ருக்களுக்கு, புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு என்று இந்து சமயம் கூறுகிறது.  இதனால்,   நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு படையெடுத்து வருவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக,  அக்னி தீர்த்த கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பணம் செய்யவும், அக்னி தீர்த்தம் உள்பட கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடவும் தொடர்ந்து தடை இருந்து வருகிறது.

கொரோனா ஊடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கோயில்கள் திறந்து, கடும் கட்டுப்பாடு களுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், மகாளய அமாவாசை அன்று, தர்ப்பணம் கொடுக்கவோ, புனித நீராடவோ தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய   ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது, வருகிற 17-ந் தேதி புரட்டாசி மகாளய அமாவாசை நாளாகும். அன்று வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடவும், கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனத்திற்கு வழக்கம் போல் அனுமதிக்கப்படுவர். தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி கோவிலுக்குள் ஒருவர் பின் ஒருவராக சென்று வரவேண்டும்.

பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அன்று ராமேசுவரம் கோவிலில் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post navigation

நாடு முழுவதும் இன்று மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வு! தமிழகத்தில் 1,17,990 மாணவர்கள் எழுதுகிறார்கள்
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 77.7%, சென்னையில் 91%

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer