சென்னை

இன்று மாலை முதல் நாளை காலை வரை மயிலை கபாலி கோவிலில் திட்டமிட்டபடி மகா சிவராத்திரி விழா நடக்கும் என அமைச்சர் சேகர் பானு கூறியுள்ளார்.

இன்று உலகெங்கும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.  சிவராத்திரியை முன்னிட்டு மயிலை கபாலீஸ்வரர் அரசு சார்பில் விழா நடைபெறும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து இருந்தார்.  இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

சென்னை பெரியார் திடலில் கி வீரமணியைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.   அதன் பிறகு அமைச்சர்  சேகர்பாபு செய்தியாளர்களிடம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று திட்டமிட்டபடி முழு இரவும் மகாசிவராத்திரி கொண்டாடப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

தவிர திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணியின் அறிக்கையை ஒரு மாற்றுக் கருத்தாகவே எடுத்துக் கொளவாதாகவும் அவருடைய கருத்தையும் தாம் ஏற்றுக் கொள்வதாகவும் கூறி உள்ளார்.  மேலும் மாற்றுக் கருத்துக்கு இடம் அளிப்பதே ஒரு ஆரோக்கியமான நடைமுறை என அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார்.