அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டதை வென்றுள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட 12 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் – கர்ஜாகின் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதனால் டை பிரேக்கர் முறையில் வெற்றியை நிர்ணயம் செய்தனர். இதிலும் முதல் இரண்டு சுற்று டையில் முடிந்தது. அடுத்த இரண்டு சுற்று கார்ல்சன் வெற்றி பெற்றார். எனவே 2-0 என்கிற புள்ளிக்கணக்கில் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.