உலன்-உதே:
பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது உறுதியானது.
ஆறு முறை சாம்பியன் பெற்றத்தை கைப்பற்றி உள்ள இந்திய வீராங்கனை எம் சி மேரி கோம் (51 கிலோ) பெண்கள் உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிக வெற்றிகரமான குத்துச்சண்டை வீரராக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். தற்போது அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், எட்டாவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
ரஷ்யாவில் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், 51 கி.கி., எடைப்பிரிவில் இந்திய டவீராங்கனை மேரி கோம் களமிறங்கி ஆடி வருகிறார்.
நடைபெற்று முடிந்த காலிறுதி போட்டியில் கொலம்பியாவின் இன்கிரிட் வாலன்சியாவை சந்தித்தார். இவர் 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர். இந்த போட்டியில் மோடிகோம் இதில் 5-0 என வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர், அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதனால் இந்தியாவுக்கு குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் உறுதியான நிலையில், அவர் பெறப்போகும் 8வது பதக்கம் இது என்று கூறப்படுகிறது.
மேரி கோம் முதன் முறையாக 2001ம் ஆண்டு களமிறங்கியபோது வெள்ளி பதக்கம் கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து, கடந்த 2002, 2005, 2006, 2008, 2010, 2018 ஆண்டைய போட்டிகிளிலும் பங்குகொண்டு, தங்கதப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
நடப்பு போட்டியில், அரையிறுதிக்கு முன்னேறிய மேரிகோம் குறைந்தபட்சம் வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார். இதனால் ஆண்கள், பெண்கள் என ஒட்டுமொத்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அரங்கில் 6 தங்கம், 1 வெள்ளி உட்பட மொத்தம் 8 பதக்கங்கள் வெல்லும் முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு கியூபா வீரர் பெலிக்ஸ் சேவன், 6 தங்கம், 1 வெள்ளி என 7 பதக்கம் வென்றுள்ளார். அடுத்த இடத்தில் அயர்லாந்து வீராங்கனை கேட்யே டெய்லர் 6 பதக்கம் (5 தங்கம், 1 வெண்கலம்) வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது