விஜய் சேதுபதியுடன் கைகோர்த்த மகிழ் திருமேனி…!

Must read

எஸ்.பி.ஜனநாதனிடம் துணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் ரோகாந்த் , இவர் தான் விஜய் சேதுபதியின் 33ஆவது படத்தை இயக்கிவருகிறார்.

இன்னும் டைட்டில் வைக்காத நிலையில் விஎஸ்பி 33 எனத் தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் இயக்குனர் மகிழ் திருமேனி நடிக்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டது. மகிழ் திருமேனி தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகியப் படங்களின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் .

இவர் ஏற்கனவே இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் காஷ்யப்புக்குப் பின்னனி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article