சென்னை: கலைஞர்  மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக  தலைமைச்செயலகத்தில்  உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி, விண்ணப்பப் பதிவுக்கான முதல்கட்ட முகாம்கள் ஜூலை 24-இல் தொடங்கி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடைபெற்றன. இரண்டாவது கட்ட விண்ணப்பதிவு  கடந்த 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாம் ஆகஸ்ட் 16 வரை நடைபெற உள்ளன.

இதற்கிடையில்,, வரும் 15ந்தேதி சுதந்திர தினம், கிராம சபைக் கூட்டங்கள் காரணமாக, கலைஞா் மகளிா் உரிமைத் தொகைக்கான முகாம்கள் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. தடைபடும் இரு நாட்களுக்கு பதிலாக, வரும்  19 மற்றும் 20-ஆம் தேதிகளில் முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,   மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பதிவு பணி, பயனாளிகளை தேர்வு செய்தல் என திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.