சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியன்று, அவர்களது வங்கி கணக்கில் ரூபாய் 1000 செலுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு , காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ந்தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, தகுதி வாய்ந்த, தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு ரூ.1000 அனுப்பப்பட்டது. ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்த முடியாது என்பதால் இந்த திட்டம் 14ந்தேதி முதல் பணம் அனுப்பும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில், இனிமேல் மாதந்தோறும் 15ந்தேதி அன்று பயனர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், 1.06 விண்ணப்பங்கள் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதுழ.
இந்த நிலையில் மாதந்தோறும் இந்த உரிமை தொகையானது 15ஆம் தேதி குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக மாதத்தின் முதல்நாளான 1ஆம் தேதி என்பது, மாத சம்பளம் வாங்குபவர்கள், பென்ஷன் பெறுபவர்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்படும். இதனால், வங்கிகளில் கடும் நெருக்கடி ஏற்படும்.
இதை கருத்தில் கொண்டும், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1 கோடி பயனர்கள் இருப்பதால், 1ஆம் தேதி பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவதில் தொழில் நுட்ப சிக்கல் எழும் என்பதால், ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியில் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையான 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.