துரை

மிழக அரசிடம் மத்திய அரசு அகழாய்வு பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை மாநில அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.  இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில்

“மத்திய அரசின் இந்தியத் தொல்லியல் துறையிடம் உள்ள 5,765 அகழாய்வு பொருட்களைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.  மத்திய அரசு ஒப்படைக்கும் அகழாய்வு பொருட்களை, பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

சென்னையில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னையில் பணியமர்த்தப்பட்டு உள்ளதால் அதில் எந்த முடிவும் எடுக்க முடியாது” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.