மதுரை:

திருநங்கையை திருமணம் செய்த மதுரை இளைஞர் ஒருவர், பாதுகாப்பு கேட்டு,  கழுத்தில் மாலை யுடன் தம்பதி சமேதராக,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஷீர் – கல்கி (திருநங்கை) தம்பதியினர்

மதுரை சுண்ணாம்பு காளவாசல் செல்வ விநாயகர் கோவிலை சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், மனைவி இறந்துவிட்டார்.

இதையடுத்து தனது குழந்தைகளை மனைவியின்  வீட்டில் ஒப்படைத்து விட்டு தனியாக சுற்றி வந்த பஷீருக்கு, மதுரை செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்த கல்வி என்ற திருநங்கையுடன்  நட்பு ஏற்பட்டது.  இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு, நெருங்கி பழகி வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பஷீரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பஷீரை கடுமையாக எச்சரித்தனர்.

இந்த நிலையில், இன்று பஷீர், திருநங்கை கல்கியை மதுரை பூங்கா முருகன் கோவிலில் முறைப்படி திருமணம் செய்துகொண்டார். அதைத்தொடர்ந்து இருவரும் மாலையும் கழுத்துமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகை தந்தனர். அங்கு தங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி தஞ்சம் அடைந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஷீர், எங்களது திருமணத்திற்கு குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன்ர. எங்களை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தி வருகின்றனர். இதனால்,  மாவட்ட ஆட்சியரிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருப்பதாகவும், மேலும் இறுதிவரை தான் கல்கியுடன்  இணைந்து வாழ்வேன், அவரை கைவிட மாட்டேன் என உறுதி அளித்தார்.

பஷீரின் பிரத்யேக பேட்டி…

https://youtu.be/Q6kKYSU02So