தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

தமிழக முதலமைச்சராக கடந்த 2017ம் ஆண்டு பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, தொடர்ந்து 2 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், அதிமுக எம்.எல்.ஏக்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக உள்ளார். இத்தகைய சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

வரும் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இது தொடர்பான அறிவிப்பை தற்போது எம்.ஜி.ஆர் பல்கலக்கழகம் வெளியிட்டுள்ளது.