மதுரை: மதுபால பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில், டங்ஸ்டன்  சஎதிர்ப்பு பதாகைகளுடன் அப்பகுதி  கிராம மக்கள் போட்டியை கண்டு களித்து வருகின்றனர்.

Save அரிட்டாபட்டி Tungsten Mining என்ற வாசக பலகையோடு பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை சிலர் கண்டுகளித்து வருகின்றனர்.

மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் மற்றும் ஆட்சியில் இருந்த மற்றும் இருக்கும் கட்சிகள்  ஒருவரை மாற்றி ஒருவரை குற்றம் சுமத்தி வருகின்றனர். திமுக அரசு தமிழக சட்டமன்றத்திலும் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஆனால், இந்த ஏலம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு முன்கூட்டியே தெரிவித்ததாகவும், ஆனால், அப்போது திமுக அரசு பதில் அளிக்கவில்லை என்று மத்தியஅரசு தேதி வாரியாக குறிப்பிட்டு  அறிவித்து உள்ளது. இருந்தாலும் அங்கு பணிகள் தொடங்கக்கூடாது என உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஆனாலும், மதுரை ஏரிய மக்கள், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகின்றனர்.  மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, நாயக்கர் பட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் டங்ஸ்டன் எடுப்பதற்கான குத்தகை ஏல உரிமையை இந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய சுரங்கதுறை அமைச்சகம் கொடுத்ததை எதிர்த்து ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது மதுரையில் நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பதாகை ஏந்தி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பாலமேட்டில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சிலர் ‘save அரிட்டாபட்டி Tungsten Mining’ என்ற வாசக பலகையோடு ஜல்லிக்கட்டைப் பார்வையிட்டு வருகின்றனர்.