மதுரை,

துரை அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற இடமான பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டுள்ளதால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு பேர்போனதும், உலக பிரசித்தி பெற்ற இடமான  மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பமானது. போட்டியை தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

இன்று நடைபெறும்  ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் மாடுபிடி வீரர்களும், மாடுகளின் உரிமையாளர்களும் ஏற்கனவே தங்களது பெயர்களை ஆதார் ஆதாரத்துடன் பதிவு செய்துகொண்டனர்.

இன்று நடைபெறும்  பாலமேடு ஜல்லிக்கட்டில்  1080 காளைகள் பங்கேற்பதாகவும், அதை பிடிக்க  1188 வீரர்களுக்கு டோக்கன் தரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காளையை அடக்கும் ஏதாவது அசம்பாவிதமே, காயமோ  ஏற்பட்டால், உடனடியாக  சிகிச்சை தர மருத்துவக் குழுவும் தயார் நி லையில் உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதையடுத்து,  7 கிராமத்து மரியாதைக் காளைகள் முதலில் களத்தில் இறக்கி விடப்பட்டன.

ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி, போட்டி நடக்கும் மைதானத்தை சுற்றி  பார்வையாளர் பகுதி, சிறப்பு விருந்தினர் பகுதி, செய்தியாளர் பகுதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.

பார்வையாளர் பகுதியில் மாடுகள் புகுந்துவிடாத வகையில் பாதுகாப்பு வளையங்களும் அமைக்கப்படுன்றன.  ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டினர் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் குழுமி வருகின்றனர்.  ஜல்லிக்கட்டு  போட்டி பாதுகாப்பு பணியில் சுமார் 1,200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய போட்டியில்  சிறப்பாக மாடுகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிக்காசு, இருசக்கர வாகனம், சைக்கிள், பீரோ, கட்டில் என ஏராளமான பரிசுப் பொருட்கள் காத்திருக்கின்றன.

அதேபோல், வீரர்களுக்கு போக்குகாட்டி, யாரிடமும் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

முன்னதாக ஜல்லிக்குட்டுக்கு முன்பாக பாலமேட்டில் ஆட்சியர் வீரராக ராவ் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர்.