பிரபல எழுத்தாளர் ஞாநி உடல் மருத்துவமனைக்கு தானம்

Must read

சென்னை:

ன்று அதிகாலை மறைந்த பிரபல எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான ஞாநியின் உடல், மருத்துவ மனைக்கு தானமாக அளிக்கப்படுகிறது.

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி காலமானார். அவருக்கு வயது 64.

தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ள ஞாநியின் இயற்பெயர் வே. சங்கரன். 1954ல் இவர் செங்கல்பட்டில் பிறந்தவர். இவரது தந்தை வேம்புவும் இதழாளர் ஆவார்.

சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும் மேடை நாடகங்களும் நடத்தி வந்தார். பரீக்‌ஷா என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்கியுள்ளார். பெரியார் பற்றிய தொலைகாட்சிப் படம் ஒன்றை இயக்கி யிருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு எளிய மக்கள் கட்சியின் சார்பாக ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். 2014 சூன் 28 அன்று எளிய மக்கள் கட்சியிலிருந்து விலகினார்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடக்க இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது உடலை, மருத்துவமனைக்கு உடல் தானம் செய்ய ஏற்கெனவே பதிவு செய்திருந்தார்.

ஆகவே இன்று மாலை நான்கு மணிக்கு அவரது உடல்  சென்னை அரசு மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட உள்ளது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஞாநி வீட்டு முகவரி:

எண் 39, அழகிரி்சாமி சாலை, கே.கே.நகர், சென்னை -78

More articles

Latest article