மதுரை:
துரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது.

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 10:30 மணிக்கு மேல் 10:59 மணிக்குள் நடக்கிறது.

காலை 7:00 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். திருக்கல்யாணத்தை காண தெற்கு கோபுரம் வழியாக பக்தர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பக்தர்கள் அலைபேசி கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விழாவிற்கு வரும் மக்கள் தங்களின் வாகனங்களை எந்த பகுதியில் நிறுத்துவது, சுவாமி வரும் வழி, மருத்துவ சேவை, அவசர உதவி எண்கள் உள்ளிட அறிந்து கொள்ள ‘மாமதுரை’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரும் 16 காலை 5:50 மணிக்கு மேல் 6:20 மணிக்குள் நடக்கிறது.

சித்திரை திருவிழா பாதுகாப்பில் 3500 போலீசார் ஈடுபடுட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.