டில்லி,

ந்தியாவிலேயே தூய்மையான கோயிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

நாட்டின்  தூய்மையின் அடையாளமாக திகழும் சிறந்த புனிதத் தலங்களுக்கான தேர்வில் 10 ஆலயங்கள் அடையாளம் காணப்பட்டன.

இதில் தமிழகத்தை சேர்ந்த  மதுரை மீனாட்சி அம்மன் கோயில், முதல் இடத்தை பிடித்துள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், மாநகராட்சி ஆணையர் ஆகியோர், மத்திய அமைச்சர் உமா பாரதியிடமிருந்து இதற்கான விருதை டில்லியில  இன்று பெற உள்ளனர்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தை சுத்தம் செய்யும் பணிகளை, ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக செயல்படுத்தினார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், கோயிலை சுற்றியுள்ள சித்திரை, மாசி, ஆவணி, மூல வீதி மற்றும் வேலி வீதிகளை பிளாஸ்டிக் இல்லா வீதிகளாக, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மாற்ற மதுரை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதன் காரணமாக இந்தியாவிலேயே சுத்தமான கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.