மதுரை:
துரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகட்டு திருவிழா இன்று தொடங்குகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடி முளைகட்டு திருவிழாவும் ஒன்று. அதன்படி நிகழ் ஆண்டுக்கான ஆடி முளைகட்டு திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.

விவசாயம் செழிக்கும் வகையிலும், நாடு செழிக்கும் விதமாகவும் கொண்டாடப்படும் ஆடி முளைக்கட்டு திருவிழா இன்று தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.