மதுரை: மதுரை மருத்துவக்கல்லூரியில் முதலாண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டு உள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே உறுதிமொழி எடுத்தோம்; சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை  மாணவர் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். இந்த விஷயத்தில் ‘டீன்’ ரெத்தினவேலு சஸ்பெண்டு செய்யப்பட்டிக்கிறார். இதற்கு ப.சிதம்பரம் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அரசு மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியின்போது,  இந்திய மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் ககரிஷி சரக் பெயரில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில், மருத்துவப்படிப்பதில் புதிதாக சேரும் மாணவர்களும், பட்டப்படிப்பு முடித்து மருத்துவப் பயிற்சியில் சேரும் மாணவர்களும் `இப்போகிரெடிக் உறுதிமொழி’ எடுத்துகொள்வது மரபாக இருந்து வருகிறது. அதன்படி, நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது,  நிகழ்ச்சியை நடத்திய மருத்துவ மாணவர் பேரவை செயலாளர் இந்திய மருத்துவ கவுன்சில் வெப்சைட்டில் உள்ள ‘மகிரிஷ் சரக் சப்த்’ என்ற சம்ஸ்கிருத உறுதிமொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உறுதிமொழி வாசித்தார்.

இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மேயர், எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனர்.  மாணவர் பேரவை செயலாளர் உறுதிமொழியை படிக்க ஆரம்பித்ததும் தான் டீன் அதிர்ச்சியடைந்துள்ளார். நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் ராஜனும், இப்போகிரெடிக் உறுதிமொழியை எடுக்காமல் ‘மகிரிஷ் சரக் சப்த்’ உறுதிமொழியை எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இது தனது கவனத்திற்கு வராமல் தவறு நடந்துவிட்டது என்று டீன் ரெத்தினவேலு கூறியுள்ளார். ஆனால், அது ஏற்கப்படாமல் சர்ச்சையாக்கப்பட்டு உள்ளது. ‘டீன்’ ரெத்தினவேலுக்கு எதிரான தரப்பினர் இதனை மற்ற மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்ளனர்.

இதுகுறித்து கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்பட்ட சமஸ்கிருத உறுதிமொழியில் ஆர்எஸ்எஸ் கோட்பாடு புகுத்தப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளதுடன் டீன் ரெத்தினவேலு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.

ஆனால், மதுரை மருத்துவக்கல்லூரி  மருத்துவர்கள் கூறுகையில், ‘‘முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த உறுதிமொழியே எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘டீன்’ கவனத்திற்கு வராமல் இந்த தவறு நடந்து விட்டது. தவறு தவறுதான். அதற்காக நீண்ட காலத்திற்கு மதுரை அரசு மருத்துவனைக்கு கிடைத்த நல்ல ‘டீன்’னை இடமாற்றம் செய்வதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ரெத்தினவேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

அதுபோல, இந்த விவகாரத்தில்,   ‘டீன்’னை மட்டுமே பலி ஆடாக்கி காத்திருப்போர் பட்டியலுக்கு மாறுதல் செய்வது நியாயமற்றது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை டீன்னுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் அனைவரையும் விசாரிக்க வேண்டும்,’’  என்று மதுரையை சேர்ந்த சுகாதார செயற்பாட்டாளர் ஆனந்த்ராஜ் வலியுறுத்தி உள்ளார்.

இதந்த நிலையில்,  சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை விவகாரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 4 பேரை அழைத்து ஆட்சியர் அனீஷ் சேகர் விசாரணை நடத்தியுள்ளார்.  மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் தலைவர் ஜோதிஷ் குமாரவேல் உள்ளிட்ட 4 மாணவர்களிடம் ஆட்சியர் விசாரணை நடத்தினார்.

பின்னர்  மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் மற்றும் மாணவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை.  ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே உறுதிமொழி எடுத்தோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி அவசர கதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் மதுரை டீன் ரத்தினவேல் கவனத்திற்கு கொண்டுசெல்லவில்லை என்றும்  தெரிவித்தனர்.

ஆனால், அரசு தனது பிடிவாதத்தை தளர்த்த மறுத்து வருகிறது.  மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் மீது  துறைரீதியாக விசாரணை நடத்துவதற்கு மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

இனி வரும் காலங்களில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் எப்போதும் பின்பற்றப்படும் ஹிப்போக்ரடிக் உறுதிமொழியை தவறாது ஏற்பதற்கு மருத்துவக் கல்வி இயக்குநர் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்தியஅமைச்சருமான ப.சிதம்பரம், மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர் களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது, வருத்தம் அளித்தது

டீன் டாக்டர் ரத்தனவேலு அவர்கள் கொரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவ மனையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம். அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை என தெரிவித்துள்ளார்.