Skip to content
  • Wed. Sep 16th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் ஆன்லைன் தேர்வு 18-ந் தேதி தொடக்கம்…

Sep 15, 2020

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளுக்கான இறுதியாண்டு இளநிலை, முதுநிலை பட்டபடிப்பு  இறுதிதிப் பருவத்தேர்வுகள் வருகிற 18-ந் தேதி முதல் தொடங்கு வதாகவும், தேர்வுகள்  ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.  இறுதிப்பருவத் தேவை  இதில் 48 ஆயிரம் மாணாக்கர்கள் எழுத உள்ளனர்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, பல்வேறு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதிப்பருவத் தேர்வுகளை இம்மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க யுஜிசி உத்தரவிட்டது. அதன்படி  செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து கல்லூரி களும், பல்கலைக்கழக்கங்களும் இறுதித்தேர்வுகளை நடத்த ஆயத்தமாகி வருகின்றன.
இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வருகிற 18-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கடைசிப்பருவ தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாகவும்,  தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் காமராஜர் பல்கலைக்க ழக  துணைவேந்தர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

அதன்படி, பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற 59 கல்லூரிகள், 24 தன்னாட்சி பெற்ற கல்லூரிகள், 4 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக துறைகளை சேர்ந்த 49 முதுநிலை பட்டப்படிப்புகள் என அனைவருக்கும் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.

அதாவது, தேர்வுக்கான வினாத்தாள் தேர்வு தொடங்குவதற்கு அரைமணி நேரம் முன்னதாக அந்தந்த கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக துறைத்தலைவர்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

கல்லூரி முதல்வர்கள் அந்தந்த துறைத்தலைவர்களுக்கு அனுப்பி வைப்பர். அவர்கள் மூலம் மாணவர்களின் இ-மெயில் முகவரிக்கு வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்.

தேர்வுகளை மாணவ,மாணவிகள் அவரவர் இருப்பிடத்தில் இருந்தே எழுதிக்கொள்ளலாம்.

புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதக்கூடாது.
இதற்கான உறுதிமொழி விண்ணப்பத்தில் மாணவர்கள் கையெழுத்திட வேண்டும்.

விடைத்தாள்களை மாணவர்கள் ஸ்கேன் செய்து துறைத்தலைவரின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

அந்தந்த கல்லூரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
கல்லூரிகளுக்கு நேரில் சென்று தங்களது துறையில் சமர்ப்பிக்கலாம் என்ற 3 விதமான வழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.
தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் விடைத்தாள்களை அவர்களாகவே மதிப்பீடு செய்து கொள்ளும்.
பிற கல்லூரிகளின் விடைத்தாள்களை வழக்கம் போல பல்கலைக்கழகம் மதிப்பீடு செய்யும்.

அதன்படி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நடத்தும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக்கான இறுதியாண்டு கடைசிப்பருவத்தேர்வை 48 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். ஏற்கனவே இறுதியாண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Post navigation

நடிகர் சூர்யாவுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்! கே.எஸ்.அழகிரி
112வது பிறந்தநாள்: அண்ணா சிலைக்கு ஸ்டாலின் மரியாதை, அறிவாலயத்தில் கொடியேற்றி அணிவகுப்பு

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer