மதுரை: மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் விழாவை கண்டு, அழகரின் ஆசி பெற்றனர்.
மதுரை அழகர்கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா இன்று காலை வெகுசிறப்பாக நடைபெற்றது. இன்று காலை 9.15 மணி முதல் 10 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கும்பாபிஷேசத்தையொட்டி, யாகசாலை பூஜைகள் அங்குள்ள திருக்கல்யாண மண்ட பத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக தொடங்கி நடைபெற்று வந்தது. யாகசாலை பூஜையில் எஜமானர் அழைப்பு, வாஸ்து சாந்தி, புன்யாக வாசனம், கும்ப ஆராதனம், அக்னி ஆராதனம், மஹா சாந்தி பூர்ணாகுதி, உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, இன்று காலை கள்ளழகர் கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் ராஜகோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், அனைவரும் விழாவை காண தடுப்புகள் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
முன்னதாக அறநிலையத்துறை சார்பில், 120 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தில் ரூ.2 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி பாலாலய பூஜையுடன் ராஜகோபுரம் வண்ணம் தீட்டும் பணிகள் ஆரம்பிக் கப்பட்ட நிலையில் கடுக்காய், சுண்ணாம்பு, பனங்கற்கண்டு ஆகிய பொருட்களை கொண்டு புணரமைக்கப்பட்டது. பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் ராஜ கோபுரம் வண்ணம் தீட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. இந்த ராஜகோபுரம் 628 சிற்பங்களை தாங்கி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. சுமார் 120 அடி உயரம் கொண்ட கள்ளழகர் கோவில் ராஜகோபுரம் 7 நிலைகளை கொண்டது. ராஜ கோபுரத்தின் கலசம் 6.25 அடி உயரம் கொண்ட ஏழு கலசங்கள் உடையது. தற்போது பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு ரூ.2 கோடி செலவில் திருப் பணிகள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் ராஜ கோபுரம் காட்சி யளிக்கிறது. இதற்கு இன்று காலை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.