நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயருக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்திய 3 திமுக கவுன்சிலர்களை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

‘இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்தியில், “திருநெல்வேலி மாநகராட்சி 6வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24வது வார்டு உறுப்பினர் ரவீந்தர் மற்றும் 7வது வார்டு பிரதிநிதி ஆர்.மணி ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் பரபரப்பு: மாநகராட்சி மேயர், ஆணையரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் தர்ணா…