துரை

வனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தத் தடை இல்லை என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொங்கலை  முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.  தமிழகம் எங்கும் இந்த வீர விளையாட்டு நடந்தாலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு என்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து குழு அமைத்து நடத்த வேண்டும் என கோரிய வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்த எந்த தடையும் இல்லை என்றும் போட்டியின் போது தனிநபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ எந்த பிரச்சனை, இடையூறு செய்யக்கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும் இந்த  ஜல்லிக்கட்டு போட்டியின்போது இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு இட்டுள்ளது.