மதுரை,

வணப்பட இயக்குனர் திவ்யபாரதிக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி மீது ஒத்தக்கடை காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.  குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து அவர்மது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கையால் மலம் அள்ளும் கொடுமை குறித்து கக்கூஸ் எனும் ஆவணப்படத்தைச் சமூக ஆர்வலர் திவ்யபாரதி அண்மையில் இயக்கி வெளியிட்டார்.  பார்த்தவர் மனம் பதைக்கும்படி இருந்த இந்த ஆவணப்படம் பரவலான வரவேற்பைப் பெற்றது. அதே நேரம் பல இடங்களில் இந்த படத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து படத்தில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவதாக கூறி, புதிய தமிழகம் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன் காவல்துறையில் ஒரு புகார் அளித்தார்.

அதில், கக்கூஸ் ஆவணப்படத்தில் தேவேந்திரகுலவேளாளர் இனத்தவரை இழிவபடுத்தியிருப்ப தாக திவ்யபாரதி மீது குற்றம் சாட்டினார். இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

இந்த வழக்கில்,  ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உயர்நீதி மன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  மேலும் காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது.