துரை

நாய் மாடு போன்றவற்றை வளர்க்க மதுரை மாநகராட்சி ரூ.10 உரிமம் கட்டணம் வசூலிக்க உள்ளது.

தமிழகத்தில் பொதுவாக செல்லப் பிராணிகளை அலட்சியமாக அலைய விடுகின்றனர்.   குறிப்பாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, குதிரை, நாய்கள் போன்ற கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் அலட்சியமாக அலைய விடுவதால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுகிறது.

தவிர இதனால் கால்நடைகளும் காயமடைவதாகவும், நாய்கள் கடித்து காயம் ஏற்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்த நிலையில் மதுரை மாநகராட்சி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடு, எருமை, குதிரை நாய்களை வளர்ப்போர், தங்கள் செல்லப்பிராணிகளை 10 ரூபாய் பதிவுக்கட்டணம் செலுத்திப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் சாலைகளில் ஆடு, மாடு, குதிரைகளை அலட்சியமாக விட்டால் உரிமையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.