துரை

துரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் வெளிநாடுகளில் பயிற்சி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் விவசாயத்தை மேம்படுத்தப் பல திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.   அதில் ஒரு பகுதியாக தமிழக விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது/.

எனவே மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் இன்று மதுரை மாவட்டத்தில் உயர்ரக தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த விரும்பும் விவசாயிகளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, பிரான்ஸ்,  தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அழைத்துச் சென்று பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் இதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளார்

இதன்படி விவசாயிகள் tnhorticulture.in.gov.in/tnhortnet/regi என்ற இணையதளத்தில் சம்பந்தப்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.