தருமபுரி: 2026ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என மத்திய குடும்பநலத்துறை இணைஅமைச்சர் பாரதி பிரவீன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடும்ப நலத்துறையின் இணையமைச்சர் பாரதி பிரவின் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில்அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். தருமபுரியில் நேற்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, கொரோனா தொற்றின் காரணமாக மதுரை எய்ம்ஸ் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும், வரும் 2026ம் ஆண்டுக்குள் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1977 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு மத்திஅரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறியவர், மத்திய அரசோடு இணைந்து தமிழ்நாடு அரசு இணைந்து சுகாதாரத்துறையின் திட்டங்களை சிறப்பாகி செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.