மதுரை:
2026-ல் மதுரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் எப்போது நிறைவு பெறும் என்று கேள்வி கேட்டு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் அக்டோபர் 2026க்குள் முடிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.