மதுரை:
துரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை காணவில்லை என ஆண்டிப்பட்டி போலீசில் தி.மு.கவினர் புகார் மனு அளித்துள்ளனர்.

2 நாள் பயணமாக தமிழகம் வந்த பாரதீய ஜனதா கட்சி தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா, மதுரையில் படுக்கைகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப்பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளதாக பேசினார். இதனையடுத்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமையிலான தி.மு.கவினர் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில், “பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியபடி 95 சதவீத முடிவடைந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப்பணிகளை நாங்கள் சென்று பார்த்த போது அங்கு கட்டப்பட்டு இருந்த கட்டிடங்களை காணவில்லை. எனவே கட்டப்பட்ட கட்டிடங்கள் என்னவாயிற்று என்பதை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை காணவில்லை என்று தி.மு.கவினர் மற்றும் காங்கிரஸினர் போலீசில் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.