சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனர்களில் ஒருவர் சுசி கணேசன். இவர் ‘விரும்புகிறேன்’ படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர். அதை யடுத்து, ‘பைவ் ஸ்டார்’, ‘கந்தசாமி’, ‘திருட்டுப்பயலே’ உள்பட வெற்றிப்படங்களை இயக்கி உள்ளார். இவருக்கும், கவிஞரும் இயக்குனருமான லீனா மணிமேகலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சசிகணேசன் மீது,  மீ டூ இயக்கம் மூலமாக லீனா மணிமேகலை பாலியல் புகார் கூறினார்.

இதையடுத்து,  லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது,  லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதையடுத்து,  சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்கி செப்டம்பர் 9ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இதை எதிர்த்து,  லீனா மணிமேகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், ஆராய்ச்சிக்காக தான் கனடா வில் உள்ள யார்க் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்பதற்காக தனது பாஸ்போர்ட் முடக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும்   கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த மனுமீதான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் விசாரணை நடத்தினார்., கடந்த விசாரணையின்போது,  மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து,  வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, லீனா மணிமேகலை  குற்றவியல் அவதூறு வழக்கை எதிர்கொண்டதால், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.