மதுரை:

மாஜிஸ்திரேட்டை தரக்குறைவாக விமர்சித்த நபரை சிறையில் அடைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


மனோகரன் என்பவருக்கு எதிராக சொத்து தொடர்பான வழக்கில் மாஜிஸ்திரேட் அருணாசலம் தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து, வழக்கில் வென்ற பெண் மற்றும் அவரது மைனர் மகள் முன்பு தன் ஆடைகளை களைந்து அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கிறார் மனோகரன்.

இது குறித்து வழக்கில் வென்ற பெண், மாஜிஸ்திரேட்டிடம் முறையிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், மனேகாரனுக்கு சிறைத் தண்டனை வழங்கினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மனோகரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அப்பீல் செய்தார்.

அப்பீல் நிலுவையில் இருந்தபோது, மாஜிஸ்திரேட் அருணாசலத்தை ‘பாஸ்டர்டு’ என்று குறிப்பிட்டு குடியரசுத் தலைவர், முதலமைச்சர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மனோகரன் புகார் கடிதம் அனுப்பினார்.

இதனையடுத்து, மனோகரன் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, எந்த சூழ்நிலையிலும் நீதித்துறை அதிகாரியை இதுபோன்று விமர்சிப்பதை ஏற்க முடியாது என்றும், மனோகரனை சிறையில் அடைக்குமாறும் உத்தரவிட்டது.