சென்னை: திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், ஆட்சியாளர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு அனுமதி கொடுத்த திமுக அரசு, திராவிட ஒழிப்பு மாநாடு, திராவிட கொள்கைக்கு எதிரான மாநாட்டுக்கு அனுமதி மறுத்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த நிலையில்,  திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, சனாதன தர்மம் குறித்து பேசிய  தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கடமை தவறிய செயல் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தமிழ்நாடு அரசை சாடியிருந்தார்.

இந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையைத் தொடர்ந்து,. திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி மறுத்த, வழக்கை தள்ளுபதி சய்த நீதிபதி,  எந்தவொரு கொள்கைக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது  என்று கூறியது.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்  என கருத்து தெரிவித்த  உயர்நீதிமன்றம். அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டது என  அதிருப்தி தெரிவித்தது.

“அதிகாரத்தில் உள்ளவர்கள் பொதுநிகழ்ச்சிகளில் பேசும்போது, சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும்” என குறிப்பிட்டதுடன்,  “குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதில், மது, போதைப்பொருட்கள், ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம்” என்றும், எந்த கொள்கைக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது  என கூறியதுடன்,  உயர்நீதிமன்றம் திராவிடக் கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஏற்கனவே திராவிட ஒழிப்பு  மாநாடு தொடர்பான வழக்கில்,  திராவிட கொள்கைக்கு ஆதரவாக மட்டும் கருத்து தெரிவிக்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்காதது கடமை தவறிய செயல்! நீதிபதி கருத்து!