தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்ற வேதாந்த் மாதவன்….!

Must read

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை வென்றுள்ளார்.

நீச்சல் போட்டியின் மீது ஆர்வம் கொண்ட 16 வயதான வேதாந்த், சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற 47-வது ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றார்.

பல்வேறு பிரிவுகளில் பங்கேற்ற அவர், 4 வெள்ளிப் பதக்கங்களையும், 3 வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடந்த லாத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில், இந்தியா சார்பாக பங்கேற்று வேதாந்த் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

 

More articles

Latest article