இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சண்டக்கோழி 2’. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கடும் பின்னடைவை சந்தித்தது இப்படம்,

இரண்டு வருடங்களுக்கு பின் தனது அடுத்த படத்தின் பணிகளை சமீபத்தில் பூஜையுடன் தொடங்கினார் இயக்குநர் லிங்குசாமி.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கிறார். ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க உள்ளார்.

இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் மாதவனை படக்குழு அணுகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் கதை மாதவனுக்கு பிடித்துப்போக, அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.