கொரோனா தடுப்பூசிகளின் ‘கேம் சேஞ்சராக’ வருகிறது இந்திய தயாரிப்பான பயோலாஜிக்கல் இ தடுப்பூசி ‘கோர்பேவாக்ஸ்’…

Must read

ஐதராபாத்: கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய தயாரிப்பான பயோலாஜிக்கல் இ தடுப்பூசியான கோர்பேவாக்ஸ் தடுப்பூசி 90 சதவிகித பாதுகாப்புடன் கொரோனா உலகில் கேம் சேஞ்சராக இருக்கும் என மருத்துவ நிபுணர் தெரிவித்து உள்ளார். இந்த தடுப்பூசியானது  அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்கு வரும்  என்.கே.அரோரா தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே சிறந்தது என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசியின் தேவை அதிகரித்து வருகிறது. இந்தியா உள்பட பல நாடுகளில் தடுப்பூசிக்கு பற்றாக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, , ஐதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ என்ற நிறுவனம் கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசி தயாரிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியானது, முதல் கட்டம் மற்றும் 2வது கட்ட பரிசோதனைகளில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியது. தற்போது 3 வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. இந்த தடுப்பூசியானது 90 சதவிகித பாதுகாப்பை அளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் விலையும் குறைவாக இருக்கும் என்று அறிவித்து உள்ளது.

இதுபற்றி சேய்தியாளர்களிடம் கூறியது  தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்.கே.அரோரா, ‘பயோலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கி உள்ள கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியானது,  சீரம் நிறுவனம் தயாரித்து வரும் நோவாவாக்ஸ் தடுப்பூசியைப் போன்றது.

‘கோர்பேவாக்ஸ்’  கொரோனாவுக்கு எதிராக 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிக்கும். கேம் சேஞ்சராகவும் இருக்கலாம். தற்போது இந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கி உள்ளது. அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்கு வரும்’ என்றார். பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் தடுப்பூசியானது, மிகவும் மலிவான விலையில், 2 டோஸ்கள் 250 ரூபாய்க்கு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நோவாவாக்ஸ் (சீரம் இன்ஸ்டிடியூட்)  தடுப்பூசி தயாரிக்கும் பணியில் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் மும்முரமாக இறங்கி உள்ளது. ஏனெனில் இந்தியா ஆண்டுக்கு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டோஸ் தயாரிக்கப் போகிறது. இது 90 சதவீத தடுப்பூசி செயல்திறனுடன் எளிய மற்றும் மலிவானதாக இருக்கும் என்றும் கூறியதுடன்  பயோ இ தடுப்பூசியும் பாதுகாப்பானவை மற்றும் மிக உயர்ந்த செயல்திறனைக் கொண்டுள்ளன” என்று அவர் கூறினார் .

More articles

Latest article