
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளி தினத்தையொட்டி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என நடிகர் சிம்பு தெரிவித்திருந்தார்.
மாநாடு படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் வெளியிடப்பட்டது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்த டிரெய்லரில் ஒய்.ஜி.மகேந்திரன் சிம்புவிடம், என்னயா டெனெட் படம் மாதிரி போட்டு குழப்புற என்கிறார். மாநாடு பட டீசர் வெளியான போது டெனெட் படத்துடன் ஒப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தன் படத்தின் மீதான விமரிசனத்தை தன் படத்திலேயே பதில் சொல்வது இயக்குநர் வெங்கட் பிரபுவின் டச் என்கிறார்கள் ரசிகர்கள்.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டைம் லூப் கருவில் உருவாகியுள்ள இந்த ட்ரைலர் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததை அடுத்து படக்குழுவினர் ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]Semma creativity!!! Eight million and counting!! #MaanaaduTrailerWonHearts https://t.co/6UoQlEDit6 pic.twitter.com/92jakvbbgn
— venkat prabhu (@vp_offl) October 5, 2021