கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கப்பட்டது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி, விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

பிக் பாஸ் வீட்டில் நேற்று (அக்டோபர் 4) இந்த வாரத்திற்கான கேப்டன்கள் தேர்வு செய்யப்பட்டனர். பாத்ரூம் சுத்தம் செய்யும் அணிக்கு ராஜூ ஜெயமோகனும், சமையல் அணிக்கு சின்னப்பொண்ணும், பாத்திரம் கழுவும் அணிக்கு நமீதாவும், ஹவுஸ் கீப்பிங் அணிக்கு பாவனியும் கேப்டனாகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ : இன்றைய நிகழ்ச்சியிலும் கடந்து வந்த பாதை சுற்று தொடர்கிறது. நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி அவரது வாழ்க்கையில் நடைபெற்ற கடினமான நிகழ்வுகளை அவருடைய பாணியில் பகிர்ந்து கொள்ள போட்டியாளர்களுக்கு மத்தியில் பல மாற்றுக்கருத்துக்கள் எழ பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு ஆரம்பிக்கிறது. நிரூப் நந்தகுமாரிடம் சிபி சந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட, “சண்ட ஆரம்பிக்க போகுது வீட்ல” என நமிதா சொல்ல…..

இரண்டாம் ப்ரோமோ : சுருதி ஜெயதேவன், பாடகி இசைவாணி மற்றும் ஐக்கி பெர்ரி ஆகிய மூவரும் பேசிக்கொண்டிருக்க, சுருதி கண் கலங்கியபடி, “நம்ம கலர வெச்சு டாமினேட் பண்ணுவாங்க” என தன்னுடைய வாழ்வில் தன்னுடைய நிறத்தின் பெயரில் அவதிக்கப்பட்டது குறித்து எமோஷனலாக பகிர்ந்துகொள்கிறார்.

3-வது ப்ரோமோ : ராஜு ஜெயமோகன், சின்னப்பொண்ணுவிடம் பெட்ரூமில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பிரியங்கா டைனிங் டேபிளில் அமர்ந்த படி மற்ற ஹவுஸ்மேட்ஸ்களிடம் ராஜுவும் சின்னப் பொண்ணும் என்ன பேசுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக டப்பிங் செய்து காட்டும் ப்ரோமோ வெளியானது.