விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார்.

‘தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.

இந்த படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘தளபதி 66’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, தற்போது ஷங்கர் இயக்கும் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்திற்கும் தமன் தான் இசையமைத்து வருகிறார். ஆதலால் தளபதி 66 படத்துக்கு அவர் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாக அவரே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் ரஜினியுடன் நடித்து வருகிறேன், சூர்யாவுடன் நடித்து வருகிறேன், விஜய்யுடன் நடிக்கவுள்ளேன்’ என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே பிரகாஷ் ராஜ், விஜய்யுடன் இணைந்து ‘கில்லி’, ’போக்கிரி’, ’ஆதி’, ’சிவகாசி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ’வில்லு’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த பிரகாஷ்ராஜ் அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து தற்போது தான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.