
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்துவரும் இப்படத்திற்கு, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு திட்டமிட்டபடியே மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்தனர்.
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் தீபாவளி தினத்தன்று ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
[youtube-feed feed=1]நிறைவான மகிழ்வில் #மாநாடு படத்தை தீபாவளியன்று வெளியிடுகிறோம். படம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இத்தனை நாட்கள் பேரன்போடு இப்படத்தை தாங்கிக்கொண்ட அனைவருக்கும் நன்றிகள். உங்கள் ஆதரவோடு வருகிறோம். வெல்வோம்.#maanaadu pic.twitter.com/pHqTBoVl6e
— sureshkamatchi (@sureshkamatchi) September 11, 2021