விஷால் தயாரித்து நடிக்கும் வீரமே வாகை சூடும் படத்தை புதுமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார் . மலையாளத்தின் முக்கிய நடிகர்களில் ஒருவரான பாபுராஜ் இதில் நடித்துள்ளார்.

அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, என்.பி. ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.எஸ். மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார்.

ஆக்‌ஷன் என்டர்டெயினராக தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டிருக்கும் விஷால், டிசம்பரில் படம் திரைக்கு வரும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.