
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். எஸ்.ஏ சந்திரசேகர், எஸ். ஜே சூர்யா பிரேம் ஜி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில் சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் நவம்பர் 25 ஆம் தேதிக்கு தள்ளிப் போனது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படம் குறித்த அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,” மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் தயாராக உள்ளோம், விரைவில் தேதி அறிவிக்கப்படும், காத்திருங்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]Happy update: we r ready for our audio launch soon. Wl inform the date asap. Stay connected. ❤️ u all.
— sureshkamatchi (@sureshkamatchi) November 9, 2021