வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயில்’. ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் ரேமண்ட் டெரிக் படத்தொகுப்பு செய்ய, ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் ஜெயில் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில் ஜெயில் படத்திலிருந்து நாளை வெளிவரவுள்ள நகரோடி எனும் பாடலின் ப்ரோமோ வீடியோ இப்போது வெளியானது. ஜீவி உடன் இணைந்து தெருக்குரல் அறிவு மற்றும் அனன்யா பட் இணைந்து பாடியுள்ள நகரோடி பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.