‘ஈஸ்வரன்’ படத்தை முடித்துவிட்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.
‘மாநாடு’ படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.
இதுவரை ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியானாலும், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை.
இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகன்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. வித்தியாசமான இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.