
சிம்புவின் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ரசிகர்களின் இதயத்தை அதிர வைக்கிறது.
மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது.
கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது என்று பிரம்மாண்டமாக இதற்காக அமைக்கப்பட்ட செட்டின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
Patrikai.com official YouTube Channel