அடித்தல் திருத்தல்களோடு ம.ந.கூ வேட்பாளர் பட்டியல்!

Must read

திருச்சி:
ரும் உள்ளாட்சி தேர்தலில், திருச்சி மாநகராட்சியில் மக்கள் நலக்கூட்டணி சார்பாக போட்டியிடும் தொகுதி ஒப்பந்தம், அடித்தல் திருத்தல்களோடு வெளியிடப்பட்டது.
18a37ed4-155d-463a-8656-7e9d7197b2db
கடந்த சட்டமன்ற தேர்தல் போலவே, ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., ஆகிய கட்சிகள் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. அதே நேரம் இக்கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தே.மு.தி.க., த.மா.கா, ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் ம.ந.கூட்டணி சார்பில் திருச்சி மாநகராட்சியில் போட்டியிடும் தொகுதிகள் குறித்த ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. இது அடித்தல் திருத்தல்களோடு இருக்கிறது. இதையடுத்து,  தொகுதிகளை ஒதுக்குவதில் ம.ந.கூட்டணி கட்சிகளுக்குள் பெரும் போராட்டம் நடந்திருக்குமோ என்ற பேச்சு எழுந்துள்ளது.

More articles

Latest article