சென்னை:
திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இதுதவிர, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.
அந்தவகையில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் செல்கிறார்..
முதல்வரின் இந்த வருகையையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel