மலையாள இசையமைப்பாளர் மறைந்த எம்.ஜி.ராதாகிருஷ்ணனின் மனைவி பத்மஜா ராதாகிருஷ்ணன் இதயக் கோளாறு காரணமாக கேரளாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (ஜூன் 15) காலமானார். அவருக்கு வயது 68 .
மலையாள படமான மிஸ்டர் பீன் படத்தில் பத்மாஜா பாடல்கள் எழுதியுள்ளார், இந்தப் படம் 2013-ம் ஆண்டு வெளியானது.
பத்மஜா மல்லுவுட்டில் பிரபலமான நடிகை கூட. பத்மஜா தனது கணவர் எம் ஜி ஆர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ராதாகிருஷ்ணனின் இசைப் பணிகளில் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.